நீலக்காகம் 1

ஒரு கொலை செய்யவேண்டும் என்று உத்தரவாகியிருந்தது. செல்லியம்மன் கோயில் பூசாரி சாமியாடி முடித்து, கற்பூரம் காட்டி, கன்னத்தில் போட்டுக்கொண்டு கூட்டம் கலைந்த பிற்பாடு ரங்கநாத ஆச்சாரி கங்காதரன் தோளைத் தட்டி சட்டைப் பைக்குள் துண்டுச் சீட்டை வைத்தார். ‘என்னாது?’ என்று சைகை காட்டியபடியே கேட்டான் கங்காதரன். ‘தெரியல. லெட்ரு. சாமி குடுக்க சொல்லிச்சி’ என்று சொல்லிவிட்டு குங்குமம் பட்டிருந்த பாதி தேங்காய் மூடியைக் கண்ணில் ஒற்றி, மஞ்சள் பையில் போட்டுக்கொண்டு, ‘அப்ப நா வரேன் பூசாரி’ என்று … Continue reading நீலக்காகம் 1